பண்டைய ரோமானிய தேர் பொம்பேயில் கண்டுபிடிப்பு

பண்டைய ரோமானிய நகரான பொம்பேயுக்கு அருகே சடங்குத் தேர் ஒன்றை இத்தாலி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு மூன்று குதிரை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே நான்கு சக்கரங்கள் கொண்ட இந்தத் தேர் இருந்துள்ளது.

விழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் இந்தத் தேர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு சிறப்பு மிக்கதும் சிறந்து பாதுகாக்கப்பட்ட நிலையிலும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கி.பி. 79 ஆம் ஆண்டு எரிமலை வெடிப்பினால் மூடப்பட்ட பொபேய் நகரில் தொல்பொருள் பொக்கிசங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிமலை வெடிப்பின் சாம்பல் அந்த நகரை மூடிய நிலையில் உயிரிழந்த நகர மக்களின் உடல்கள் மற்றும் கட்டிடங்கள் அழிவடையாது காணப்படுகின்றன. இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தேர் இரும்பு கலந்த செம்பினால் அலங்கார வேலைப்பாடுகளுடன் காணப்படுவதாக விபரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 7ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தேரை முழுமையாக வெளியே எடுப்பதற்கு இன்னும் சிலவாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...