சுற்றுப்போட்டியில் மாவடி லெஜன்ட் அணி சம்பியன்

மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மாவடி லெஜன்ட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் நோக்கில் மாவடி லெஜன்ட், மாவடி மாஸ்டர், மாவடி ஹில்ஸ் ஆகிய மூன்று அணிகளாக கழகத்திலுள்ள அனைத்து வீரர்களையும் பிரித்து அணிக்கு 08பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் மகா வித்தியாலய பாடசாலை மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இத்தொடரில் மாவடி லெஜன்ட், மாவடி மாஸ்டர், மாவடி ஹில்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றி இறுதிச் சுற்றுக்கு மாவடி மாஸ்டர் அணியும், மாவடி லெஜன்ட் அணியும் தெரிவானது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மாவடி மாஸ்டர் அணி முதலில் துடுப்படுத்தாடி 05 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 73 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாவடி லெஜன்ட் அணி 4.5 ஓவர்கள் நிறைவில் 74ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இச்சுற்றுப்போட்டி மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.சிராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜலீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார்.

இதில் மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர் எப்.எம்.றிஸ்பத், விளையாட்டு வீரர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சவளக்கடை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...