இலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும் | தினகரன்

இலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்

மட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய் மொழி தினமும் இலக்கிய கலாநிதி அமரர் வ. அ. இராசரத்தினம் இருபதாவது ஆண்டு நிகழ்வும் நினைவு நூல் வெளியீடும் அண்மையில் Zoom மூலம் நடை பெற்றது.

நிகழ்வில் வெளியிடப்பட்ட வ. அ. நினைவு நூலை பேராசிரியர் செ. யோகராசா வ. அ. வின் மூத்த மகள் ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தவல்லிக்கும் மகுடம் ஆசிரியர் வி. மைக்கல் கொலின் வ. அ. வின் மகன் வண. நவரட்ணம் அடிகளாருக்கும் வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி றூபி வலண்டினா பிரான்சிஸ் வ. அ. வின் நாவல்கள் பற்றியும் பேராசிரியர் செ. யோகராசா

வ. அ. ஈழத்தின் மிக முக்கிய ஆளுமை என்ற தலைப்பிலும் மகுடம் வி. மைக்கல் கொலின் வ. அ. நினைவுப் பகிர்வையும் வ. அ. வின் புதல்வர் வண. நவரெட்ணம் அடிகளார், வ. அ. வின் மூத்த புதல்வி ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தவல்லி ஆகியோர் தந்தையுடனான தமது நினைவுகளையும், அவரது படைப்பாளுமையைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரபல பெண் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,சிறுகதை மஞ்சரி ஆசிரியர் கரவை. மு. தயாளன், கவிஞர் பொதிகை ஜெயா, சேனையூர் ரத்னசிங்கம் மற்றும் வ. அ. வின் உறவினர்கள் என பலரும் நிகழ்வில் உரையாற்றினர்.

வ. அ. நினைவாக கவிதாஞ்சலியும் நடைபெற்றது. இந் நிகழ்வை வ. அ. வின் மாணவர் பேராசிரியர் பாலசுகுமார் தொடக்கவுரை ஆற்றி தொகுத்து வழங்கினார்.

இடை இடையே அவர் வ. அ. வின் கவிதைகளை பாடல்களாக பாடினார். நான்கு மணி நேரம் நடைபெற்ற இந் நிகழ்வில் கவிஞர் கவியுவன் உட்பட பல இலக்கியவாதிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மைக்கல் கொலின்

 


Add new comment

Or log in with...