தோட்ட தொழிலாளர்களுக்கும் காப்புறுதித் திட்டம் தேவை | தினகரன்

தோட்ட தொழிலாளர்களுக்கும் காப்புறுதித் திட்டம் தேவை

- தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோதிலும் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை என தொழிற்சங்கங்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றன.

தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பல முறை இவ்வாறான மகஜர்களைச் சமர்ப்பித்துள்ள போதிலும் இன்னும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது தொழிலை முன்னெடுத்து வரும் தோட்டத்தொழிலாளர்களுக்கு எந்தவித காப்புறுதி திட்டங்களும் கிடைப்பதில்லை. தோட்டங்களில் பணிபுரிவோர் அடிக்கடி திடீர் சம்பவங்களால் உயிரிழப்புக்களுக்கும் காயங்களுக்கும் உட்படுகின்றனர்.

எனவே நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பான இவர்களுக்கு முறையான காப்புறுதித் திட்டம் ஒன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...