மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் | தினகரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

- தடுக்க நடவடிக்கைகள் வகுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை அரச அதிகாரிகளால் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சட்டரீதியான சவால்கள் பற்றியும் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில் நேற்று முன்தினம் (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாவட்டத்திலுள்ள சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அரச உத்தியோகத்தர்கள், பொலிசார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளுக்கிடையில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுப்பதில் அரச அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், சட்டரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பாடசாலை மட்டங்களிலும், கிராமிய மட்டங்களிலும் ஏற்படுகின்ற துஷ்பிரயோகங்கள், தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் போன்ற விடயங்களும் அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கவேண்டிய விடயங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன.

மட்டக்களப்பு விசேட நிருபர்


Add new comment

Or log in with...