கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் | தினகரன்

கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம்

தியாகி அறக்கொடை நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் வருடாந்தம் அங்கத்துவ கழகங்களுக்கிடையே நடாத்தும் வருடாந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரின் இறுதியாட்டங்கள் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) பகல் -இரவு ஆட்டங்களாக இடம்பெற்றவுள்ளது.

இதில் மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள பி பிரிவு அணிகளுக்கான மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து தொண்டைமானாறு கலையரசி விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ள பி பிரிவு அணிகளுக்கான இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து நீர்வேலி காமாட்சி அம்பாள் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ள ஏ பிரிவு அணிகளுக்கான இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது.

யாழ். விளையாட்டு நிருபர்


Add new comment

Or log in with...