கொடிகாமம் பகுதியில் மதுவரி திணைக்களத்தினர் சுற்றிவளைப்பு | தினகரன்

கொடிகாமம் பகுதியில் மதுவரி திணைக்களத்தினர் சுற்றிவளைப்பு

கொடிகாமம் கெற்பொலிப் பகுதியில் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், பெருமளவு கோடா, கசிப்பு என்பன மீட்கப்பட்டன. இச்சுற்றி வளைப்பு கடந்த (24) புதன்கிழமை இடம்பெற்றது.சாவகச்சேரி மதுவரித் நிலையத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே அதிகாரிகள் இப்பகுதியைச் சுற்றிவளைத்தனர்.

இதன்போது 700 லிட்டர் கோடா, ஆறு லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டன.

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவிலில் விஷேட நிருபர்


Add new comment

Or log in with...