கிழக்கில் காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் | தினகரன்

கிழக்கில் காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்

கிழக்கில் காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விசேட ​தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

காடுகள் மற்றும் தொல்பொருள் இடங்களை அழிக்கும் நபர்களின் மீது கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு அவர் இதன்போது அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் காடழிப்பை தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க பாதுகாப்பு படையினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், திருகோணமலை மாவட்டத்தில் காடுகளை சோதனையிட இராணுவத்தினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் படைப்பிரிவின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் காடழிப்பு தொடர்பில் பாதுகாப்பு படையினருக்கு அறிவித்தல் வழங்க 0707011117 என்ற புதிய தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதேச மட்டத்தில் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தமன் தர்ஷன பாண்டி கோரல, ஆளுநரின் செயலாளர், கிழக்கு கடற்படை தளபதி மதநாயக்க, முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

ரொட்டவெவ குறூப், முள்ளிப்பொத்தானை குறூப், திருமலை மாவட்ட விசேட, கந்தளாய் தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...