கிண்ணியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு | தினகரன்

கிண்ணியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (23) மாவட்டத்தின் முதலாவது கொரோனா மரணம் இடம் பெற்றதாக கிண்ணியா தள வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.

குறித்த நபர் கிண்ணியா அடப்பனார் வயல் பிரதேசத்தை சேர்ந்த 79 வயது ஆண் எனக் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2021.02.19 ஆம் திகதி தனியார் வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்ற நிலையில் அவருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 உறுதிப்படுத்தப்பட்டதாக கிண்ணியா தள வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

திருமலை மாவட்ட விசேட நிருபர்
 


Add new comment

Or log in with...