இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு இலட்சம் மரநடுகை | தினகரன்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு இலட்சம் மரநடுகை

சாரணியத்தின் ஸ்தாபகர் "பேடன் பவல்" நினைவுநாளை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுகை திட்டத்திற்கமைய திங்கட்கிழமை (22) அக்கரைப்பற்று, கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால்  பல பாடசாலைகளில் மரம் நடுகை நிகழ்வுகள்  இடம்பெற்றன.

உதவி மாவட்ட ஆணையாளர் எப்.எப்.றிபாஸ் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளர் யூ.எல்.எம்.ஹாசீம், சம்மாந்துறை பிரதேச செயலாளரும்,சங்கத்தின் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனிபா, மாவட்ட ஆணையாளர்,எஸ். ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.

இங்கு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனிபா, சாரணியம் நல்ல பண்புகளையும், ஒழுக்க விழுமியங்களையும் கொண்ட ஒரு அமைப்பாகும்.  உலகத்தில் நூற்றுக்கணக்கான நாடுகளில் சாரணிய இயக்கம் உள்ளது.

இதன் ஸ்தாபகரான பேடன் பவலின் இன்றைய நினைவு நாளை உலகம் பூராகவும் கொண்டாடுகின்றனர். எதிர்காலங்களில் சாரணர்களின் தொகையை அதிகரிப்பதற்கும், ஜனாதிபதி சாரணர்களை உருவாக்குவதற்கும் மாவட்ட தலைவராகிய நான் முழுமையாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்

அக்கரைப்பற்று   மத்திய மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம், அறபா, அர்ஹம். சின்னப் பாலமுனை அல் ஹிக்மா ஆகிய பாடசாலைகளில்  மர நடுகை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாலமுனை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...