கோழிகளை வேட்டையாடிய பூனை பொறியில் சிக்கியது | தினகரன்

கோழிகளை வேட்டையாடிய பூனை பொறியில் சிக்கியது

புத்தளம் வென்னப்புவ பகுதியில் கோழிகளை வேட்டையாடி வந்த "மீன்பிடி" வகை பூனை ஒன்று பொறியில் சிக்கியுள்ளது.

இதனை அவதானித்த அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு தகவல் வழங்கினர்.தகவல் கிடைத்ததும்

அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர், பொறியில் சிக்கியிருந்த "மீன்பிடி"வகை பூனையை உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இந்தப் பூனை புத்தளம் தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(புத்தளம் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...