கல்முனை கீமா சுப்பர் லீக் தொடரில் ஸ்ருடியோ 96 பிறதர்ஸ் வெற்றி

கல்முனை கீமா சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் ஸ்ருடியோ 96பிறதர்ஸ் அணி வெற்றிவாகைசூடி சம்பியன் கேடயத்தை சுவீகரித்துக்கொண்டது.

அணிக்கு 11 பேர்கொண்ட 8 ஓவர் கிரிக்கட்சுற்றுப்போட்டி கல்முனை உவெஸ்லி மைதானத்தில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இச்சுற்றுத் தொடரில் கல்முனையின் பிரபல கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் ஆறு அணியினராகப் பிரிக்கப்பட்டு 06 அனுசரணையாளர்கள் ஒப்பந்தம் செய்திருந்தனர்.

இறுதிப்போட்டி கடந்த (20) நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு ஸ்ருடியோ 96 பிறதர்ஸ் அணியும் விஆர்கே அணியும் தெரிவாகி மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய விஆர்கே அணி 8 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ருடியோ 96பிறதர்ஸ் அணி 9.2 ஓவர்களில் 73ஓட்டங்களைப் பெற்று வெற்றிவாகை சூடியது.

உவெஸ்லி அதிபர் செ.கலையரசன் சரவணாஸ் லதன் உள்ளிட்ட அதிதிகள் வெற்றிக் கேடயத்தை ஸ்ருடியோ 96பிறதர்ஸ் அணித் தலைவர் ஜி.கௌரீஸ் மற்றும் அணியின் அனுசரணையாளரான எஸ்.சிந்துஜன் ஆகியோரிடம் வழங்கிவைத்தனர்.

கல்முனை வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற சுப்பர் லீக் கேடயத்தை வெற்றிபெற்றதன் மூலம் ஸ்ருடியோ 96 பிறதர்ஸ் அணி புதியசாதனையை பதிவு செய்துள்ளது.

(காரைதீவு குறூப் நிருபர் )


Add new comment

Or log in with...