சுகாதார அமைச்சுக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; அமைதியின்மை | தினகரன்

சுகாதார அமைச்சுக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; அமைதியின்மை

சுகாதார அமைச்சுக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; அமைதியின்மை-Health Service Staff Protest-Tense Situation at Health Ministry

- சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில்
- நிலைமை கட்டுப்பாட்டில்

ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார சேவை ஊழியர்கள், கொழும்பிலுள்ள நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்திருந்த நிலையில், திடீரென சுகாதார அமைச்சுக்குள் நுழைந்தால் அங்கு அமைதியற்ற நிலை தோன்றியது.

இதன்போது, குறித்த பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்த்ககது.

இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கொடுப்பனவுகள், சேவையில் நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட 11 கோரிக்கைளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கத்தினர் இவ்வார்ப்பாட்ட பேரணியை இன்று (23) ஒழுங்கு செய்திருந்தனர்.

பேரணியாக வந்த அவர்கள், சுகாதார அமைச்சிற்குள் திடீரென நுழைந்த நிலையில், நிலமையை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களில் ஒரு சில பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...