லேக்ஹவுஸ் ஸ்தாபகர் டி.ஆர். விஜயவர்தனவின் 135ஆவது ஜனன தினம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர். விஜயவர்தனவின் ஜனன தினம் இன்றாகும்.

வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திலிருந்து நாடு விடுதலை பெற, தேசிய இறைமையை பாதுகாக்க, நாட்டை நேசிப்பவர்கள் தங்களுடைய பணியை மேற்கொள்ளும் போது சிங்கள,  தமிழ், ஆங்கில பத்திரிகைகளை ஆரம்பித்து அதன் மூலம் நாட்டின் சுதந்திரத்தை பெற பல துறைகளிலும் பெரும் பணியாற்றியவர் டி.ஆர். விஜயவர்தன. பத்திரிகையின் தாய்வீடாக 1962 ல் லேக்ஹவுஸை ஆரம்பித்து இந்நாட்டில் பாரிய அளவில் வர்த்தக ரீதியாக பத்திரிகை தொழிலை மேற்கொண்டதோடு பத்திரிகை, புகைப்படத்தொழிலை மாத்திரமல்ல வணிக பத்திரிகை கலாசாரத்தையும் வளர்த்தவராவார்.

1886 பெப்ரவரி 23 ஆம் திகதி பிறந்தார். இவரின் தந்தை தொன்பிலிப் விஜேவர்தன ஆவார். தாய் ஹெலேனா விஜேவர்தன. முகத்துவாரம் சென் தோமஸ் கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அவர், இங்கிலாந்து கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று சட்டத்தரணியானார்.

ஆழ்ந்த கலாசார எண்ணமும், அரசியல் ஞானமும் தேசாபிமான சிந்தனையும் கொண்டு நாட்டுக்கு சேவையாற்றிய விஜேவர்தன 1950ம் ஆண்டு ஜுன் மாதம் 13ம் திகதி அமரரானார்.

 


Add new comment

Or log in with...