மாவையுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராசா மற்றும் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் ஆகியோர் பங்குபெற்றியிருந்தனர்.

இச் சந்திப்பின் போது 13ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதி உயர்ஸ்தானிகர், அவ்வாறு மேற்கொள்வதன் மூலம் அர்த்தப்புஷ்டியான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.

மேலும் இச் சந்திப்பில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் அது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டினையும் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.


Add new comment

Or log in with...