யோசனைகளை முன்வைக்க அனைத்து கட்சிகளுக்கும் சந்தர்ப்பம் | தினகரன்

யோசனைகளை முன்வைக்க அனைத்து கட்சிகளுக்கும் சந்தர்ப்பம்

SLPPயும் சமர்ப்பிப்பு என்கிறார் ​ெபசில் ராஜபக் ஷ

புதிய அரசியலமைப்பு குறித்து யோசனை முன்வைப்பதற்கு சகல கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய எமது கட்சியின் நிலைப்பாட்டையும் நிபுணர் குழுவுக்கு முன்வைத்ததாக பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு குறித்து நிபுணர் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்‌ஷ அடங்கலான குழு புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவை சந்தித்து தமது யோசனையை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச,

நிபுணர் குழுவுக்கு எமது கட்சியின் யோசனைகளை முன்வைத்துள்ளோம். அது தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டது. எமது கூட்டணி கட்சிகளும் தமது யோசனைகளை சமர்ப்பித்துள்ளன என்றார்.

புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு தயாரிப்பு குழு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கட்சிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் பெறப்படுகின்றன. இதற்கமைவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் புதிய அரசியல் யாப்புக்கான ஆலோசனை மற்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.(பா)


Add new comment

Or log in with...