யூனிலீவர் ஶ்ரீலங்கா அறிமுகப்படுத்தியுள்ள Vim தரை மற்றும் மேற்பரப்பு தெளிப்பான்

யூனிலீவர் ஸ்ரீலங்கா, தனது விம் வர்த்தகநாமத்தின் கீழ் தரை சுத்திகரிப்பான் மற்றும் மேற்பரப்பு தெளிப்பான் உற்பத்திப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் மக்கள் சுகாதாரம் மற்றும் தமது குடும்பங்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் கரிசனையைக் கொண்டுள்ள நிலையில் அவர்களது ஆரோக்கியம் மற்றும் நலன் ஆகியவற்றை மேம்படுத்த உதவ வேண்டும் என்ற நிறுவனத்தின் அர்ப்பணிப்புடன் ஒன்றியதாக இந்த உற்பத்தி அமைந்துள்ளது.

நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பினை வழங்கி, விம் தள சுத்திகரிப்பான் மற்றும் மேற்பரப்பு தெளிப்பான் 99.9% கிருமிகளைக் கொல்லும் திறன் கொண்ட கிருமிகாந்த தொழில்நுட்பத்தை உபயோகிப்பதுடன், பீங்கான், உலோகம், கண்ணாடி, கிரானைட் (கருங்கல்) மற்றும் சீமெந்து அடங்கலாக பல்வேறுபட்ட மேற்பரப்புக்களில் அழுக்கு மற்றும் கறைகளைப் போக்குகின்றன.

நடுநிலையான pH பெறுமானத்துடன், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தயாரிப்பு முறையுடன், இந்த உற்பத்திவரிசை 100% மக்கும் தன்மை கொண்டதுடன், ஒரு விசேட தூண்டல் முத்திரையின் மூலமாக உள்ளே காணப்படும் தயாரிப்பு எவ்விதமான வெளித்தொடர்பும் கொண்டிராத வகையில் 100% மீள்சுழற்சி செய்யக்கூடிய பொதியிடல் வடிவில் வெளிவருகின்றன.

மேலும் சிறுவர்கள் தீண்டாத வண்ணம் மூடி வைக்கக்கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வீடுகளில் அவற்றின் பாதுகாப்பான பாவனையை மேம்படுத்துகின்றன.

இந்த உற்பத்தி வரிசையானது பல்வேறுபட்ட அளவுகொண்ட பொதியிடல் வடிவங்களில் கிடைக்கப்பெறுகின்றன. 200 மி.லீ மற்றும் 500 மி.லீ போத்தல்கள் முறையே ரூபா 105/- மற்றும் ரூபா 190/- என்ற விலைகளில் கிடைக்கப்பெறுவதுடன், 475 மி.லீ போத்தல் விம் மேற்பரப்பு தெளிப்பான் தயாரிப்பானது ரூபா 330/- என்ற விலையில் கிடைக்கப்பெறுகின்றது.


Add new comment

Or log in with...