உள்நாட்டு புத்தாக்க முயற்சிகளை விரைவுபடுத்தும் நெஸ்லே

உள்நாட்டு புத்தாக்கங்கள் மீதான தனது கவனத்தை விரைவுபடுத்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் புத்தாக்க சவால் ஒன்றை ஆரம்பிக்கும் முகமாக, களனி, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கொழும்பு மற்றும் மொரட்டுவை ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களுடன் நெஸ்லே கைகோர்த்துள்ளது. 200 வரையான பல்கலைக்கழக மாணவர்கள் உள்நாட்டு மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் ஊட்டச்சத்து நிறைந்த உற்பத்திகள் மற்றும் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பேண்தகமையை மேம்படுத்தக்கூடிய முயற்சிகளுக்கான தங்கள் சிந்தனைகளை சமர்ப்பிப்பார்கள்.

புத்தாக்கம் என்பது எப்போதுமே எமது நிறுவனத்தின் உயிர்நாடியாகக் காணப்படுகின்றது.

நுகர்வோர் நடத்தையில் கணிசமான மாற்றங்களை நாங்கள் காணும் இக்காலகட்டத்தில், உள்நாட்டு புத்தாக்கங்களை ஆதரித்து, அவற்றின் அனுகூலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி, எங்கள் நுகர்வோருக்கு நாங்கள் வழங்கும் உற்பத்திகளை சிறப்பாக மேம்படுத்த விரும்புகின்றோம்.

எங்கள் உற்பத்திகளில் பேண்தகமை மற்றும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துவது எங்கள் முக்கிய முன்னுரிமைகளாகக் காணப்படுவதுடன், நுகர்வோருக்கு மட்டுமன்றி, பூமிக்கும் நன்மைபயக்கின்ற உற்பத்திகளை வழங்க விரும்புகிறோம். எங்கள் இளம் இலங்கை திறமைசாலிகளின் சிந்தனைகளைக் காண்பதில் எமக்கு இனியும் பொறுமை கிடையாது!, என்று நெஸ்லேயின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் காவலின் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த சவாலின் மூலம், நிறுவனம் தனது புத்தாக்க நடைமுறையை புதுப்பித்துக் கொள்வது மட்டுமன்றி, இளைஞர்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவித்து,

அவர்களை ஆதரிக்க முடியும் என்றும் நம்புகிறது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரு வலுவான சிந்தனையை எவ்வாறு கருத்தியல் வடிவில் வெளிக்கொணருவது மற்றும் சந்தைப்படுத்துவது என்பது குறித்த அவர்களின் அறிவை ஆழமாக்குவதில் தங்கள் புத்தாக்கச் செயற்திட்டத்திற்கான வழிகாட்டல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.


Add new comment

Or log in with...