ஜெனீவாவில் ஒன்றாக பயணிக்க உதவி கோரினால் ஐ.ம.ச. தயார் | தினகரன்

ஜெனீவாவில் ஒன்றாக பயணிக்க உதவி கோரினால் ஐ.ம.ச. தயார்

அரசுக்கு அசோக அபேசிங்க M.P பச்சைக்கொடி

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருந்த 30/1 கீழ் தீர்மானத்துக்கெதிராக ஒன்றாக பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒத்துழைப்புகளை அரசாங்கம் கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜெனிவா தீர்மானத்துக்கெதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளார். இது தொடர்பில் எம்முடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

அரசாங்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவேனும் எமக்கு அழைப்புகள் விடுத்தால் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தி ஒத்துழைப்புகளை வழங்க முடியும் என்பதுடன், ஜெனிவா விவகாரத்தை எதிர்கொள்ள வேலைத்திட்டமொன்றையும் வகுக்க முடியும் என்றார்.

 

 

சுப்பிரமணியம் நிஷாந்தன் ​


Add new comment

Or log in with...