நுவரெலியாவில் விளிம்புநிலை கிராமப்புற சமூகங்களுக்காக 195,000 அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கிய கொய்கா | தினகரன்

நுவரெலியாவில் விளிம்புநிலை கிராமப்புற சமூகங்களுக்காக 195,000 அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கிய கொய்கா

நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் -19 இனாலேற்பட்ட விளிம்புநிலை கிராமப்புற சமூகங்களின் பொருளாதார சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்காக 195,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை ஐ.நா சபையின் மீள்குடியேற்றத்திட்டத்துக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், (கொய்கா) வழங்கியது.

திட்டத்தினைக் கையளிக்கும் நிகழ்வு பெப்ரவரி 9 ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெற்றது. இந்த திட்டம் கொய்காவால் நிதியளிக்கப்பட்ட “இலங்கையில் உள்ள தோட்டத் குடியேற்றங்களுக்கு அதிகாரமளித்தல் எனும் திட்டத்தின் நீட்சியாக இடம்பெறுகின்றது

இயக்குனர் திருமதி காங் யூன் ஹ்வா, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி திருமதி ஹனா சிங்கர் ஹமி, ஐக்கிய நாடுகள் மனிதக் குடியேற்றத் திட்டத்தின் திட்ட முகாமையாளர் டாக்டர்.சனகா தல்பஹேவா மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கொய்கா இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதிகள் , நுவரெலோயாவின் விவசாய உற்பத்தியாளர்களின் விசேட கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றனர்.

COVID19 வைரஸின் எதிர்மறையான சமூக-பொருளாதார தாக்கங்களை கையாள்வதில் உதவி வழங்க இந்த திட்டம் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை எவ்வாறு குறைப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் பாதுகாப்பு செய்திகள் பரப்பப்பட்டன. நெருக்கமான வாழிடங்கள் மற்றும் பிற வகையான உரிமை மீறல்கள் போன்ற தொற்றுநோய்களின் சமூக தாக்கம் மற்றும் தலையீடுகள் மூலம் தீர்க்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் இப்பகுதியில் உள்ள விளிம்புநிலை சமூகங்களின் பின்னடைவை குறைப்பதிலும் இந்த திட்டம் தலையிட்டது.


Add new comment

Or log in with...