சிங்கரின் 11th Gen Intel Core Processors உடன் புதிய டெல் மடிக்கணினி அறிமுகம் | தினகரன்

சிங்கரின் 11th Gen Intel Core Processors உடன் புதிய டெல் மடிக்கணினி அறிமுகம்

11th Gen Intel Core Processors இனால்் இயக்கப்படும் புதிய டெல் மடிக்கணினியை சிங்கர் ஸ்ரீலங்கா அண்மையில் வெளியிட்டுள்ளது. இப்புதிய டெல் மடிக்கணினியானது புதிய தொழில்நுட்பம் மற்றும் வேகம், வினைத்திறன் போன்ற செயற்பாடுகளினால் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. டைகர் லேக் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த ப்ரோஸசர் மெல்லிய மற்றும் கனம் குறைந்த மடிக்கணினிகளுக்கான உலகின் மிகச்சிறந்த ப்ரோஸசராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 11th Gen processor ஆனது அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறன் மற்றும் விரைவான பிரதிபலிப்புப் போன்றவற்றுடன் சக்திமிக்க செயல்திறனைக் கொண்டுள்ளதாக இன்டெல் தெரிவிக்கிறது. இந்த ப்ரோஸசர் கம்பனியின் ஒருங்கிணைக்கப்பட்ட Intel Xe க்ரபிக்ஸ் அட்டையுடன் இணைந்ததாகக் காணப்படுகிறது. இது அதிவேக காட்சிகளை வழங்குவதுடன், க்ரபிக்ஸ் வடிவமைப்பாளர்கள், எடிட்டர்கள் மற்றும் விளையாட்டாளர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

இன்டெலின் புதிய Xe சிப் ஆனது நுகர்வோர் வெளிப்புற க்ரபிக்ஸ் அட்டையின்றி தமது மடிக்கணினியைப் பயன்படுத்த உதவுவதுடன், பல மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் பிரத்தியேக க்ரபிக்ஸ் அட்டையான எேனையை MX350 இன் செயல்திறனுக்கு சமமான செயற்பாட்டை புதிய இன்டெல் சிப் கொண்டுள்ளமை புதிய அளவுகோலாக அமைந்துள்ளது. இந்த சிறந்த கிரபிக்ஸ் ஆதரவு மற்றும் செயல்திறன் என்பன உபயோகிப்பவர்கள் இதற்காகப் பிரத்தியேக க்ரபிக்ஸ் அட்டைகளைப் பயன்படுத்தாமல் சிறந்த காட்சிகளைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது.

தற்பொழுதுள்ள டெல் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி, சிங்கர் புதிய டெல் 3000 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறந்த அம்சங்களை வழங்குவதன் ஊடாக டெல் 3000 தொடர் மடிக்கணினிகள் தீர்க்கமான வடிவமைப்பு மாற்றத்துக்கு உட்பட்டிருப்பதுடன், 10th Gen 5000 தொடருக்கு சமமாகவும் அமைந்துள்ளன.


Add new comment

Or log in with...