காதலை வெறுக்கும் நித்யா மேனன் | தினகரன்

காதலை வெறுக்கும் நித்யா மேனன்

''என் மீது வரும் புகார்களையும் விமர்சனங்களையும் கண்டுகொள்ள மாட்டேன். எந்த விஷயம் ஆனாலும் ஒளிவு மறைவு இல்லாமல் நேராக எதிரில் பேசுவதும், தெளிவாக சொல்வதும்தான் எனது பழக்கம். எதற்கும் தயங்க மாட்டேன். எனது முதல் காதல் தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு கொஞ்ச நாட்கள் ஆண்களையே நான் வெறுத்தேன். இனிமேல் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

யாருக்காகவும் என்னை நான் மாற்றிக்கொள்வது சுத்தமாக பிடிக்காது. எனக்கு பிடித்த மாதிரி வாழத்தான் விரும்புவேன். நிஜ வாழ்க்கையில் சாதாரண பெண்ணாகத்தான் யோசிப்பேனே தவிர நான் ஒரு நடிகை என்றோ, மற்றவர்களை விட வித்தியாசமானவள் என்றோ, ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவள் என்றோ எப்போதும் நினைக்க மாட்டேன்.'' இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.


Add new comment

Or log in with...