அ.தி.மு.கவுக்கு சசிகலா கொடுத்துள்ள அதிர்ச்சி!

தமிழக சட்டசபைத் தேர்தலில் சசிகலா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக டெல்லியில் பா.ஜ.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அ.ம.மு.க குழு ஒன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்துள்ளார் சசிகலா. இதனால் சசிகலாவால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால் சிக்கிமில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தமாங் தேர்தலில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் ஆணையம். இதனை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பும் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறது.

ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரனும், "சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். இதற்காக சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் போட்டியிடுவார்" என கூறியிருந்தார்.

சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணைய அனுமதி பெறுவதில் ஏற்கனவே தினகரன் தரப்பு மும்முரமாக இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் பிரதமர் மோடியை மிகவும் புகழ்ந்தும் ஒரத்தநாடு பேட்டியில் கூறியிருந்தார் தினகரன்.

இந்த நிலையில்தான் அ.ம.மு.கவின் மூத்த நிர்வாகிகள் சிலர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் பா.ஜ.க தலைவர்களுடன் சசிகலா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்த தூதுக் குழு ஆலோசனை நடத்த உள்ளது. இந்த தகவல் அ.தி.மு.க வட்டாரங்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.


Add new comment

Or log in with...