நீதிமன்ற தடையுத்தரவை மீறிய எம்.பிக்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்ற தடையுத்தரவை மீறிய எம்.பிக்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அழைப்பாணை-P2P Protest-Court Summons 7 Person Including MPs

பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜமாணிக்கம் சாணக்கியன், கோ. கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 03 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வதற்கு எதிராக, கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

எனினும் இடம்பெற்ற குறித்த பேரணியில் நீதிமன்ற தடைஉத்தரவினை மீறி கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  எழுவருக்கு  எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் கல்முனை பொலிஸாரினால்  கடந்த வாரம் (05) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை   கல்முனை நீதவான் ஐ.ஏன். றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான  இரா. சாணக்கியன், கோ. கருணாகரம், த. கலையரசன், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ. கணேசானந்தன்,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ. நிதான்சன் ஆகியோரை  எதிர்வரும் ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தார்.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...