இலக்கியவாதி சந்திரலிங்கத்துக்கு கல்முனையின் பாராட்டுவிழா | தினகரன்

இலக்கியவாதி சந்திரலிங்கத்துக்கு கல்முனையின் பாராட்டுவிழா

ஓய்வுநிலை அதிபரான சந்திரலிங்கம் இலக்கியவாதியாக எழுத்தாளராக திகழ்ந்துவருகிறார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிஉயர் வித்தகர் விருதைப் பெற்ற கா.சந்திரலிங்கத்தைப் பாராட்டும் நிகழ்வு கல்முனைநெற் ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் தம்பலவத்தை ஜீவா தென்னந்தோப்பில் நடைபெற்றது.

டாக்டர் குண.சுகுணன் சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித், தினகரன் முன்னாள் பத்திராதிபர் க.குணராசா, கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் வித்தகர் சந்திரலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பிரபல சிறுகதை எழுத்தாளரும் கவிஞருமான சபா.சபேசன் புகழாரம் சூட்டினார்.

எழுத்தாளர் சபா.சபேசன் உரையாற்றுகையில்;

சந்திரலிங்கம் பல நாடகங்களை தயாரித்து நடித்துள்ளார் 1971களில் அக்னி இலக்கிய கலை வட்டத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார். கையெழுத்துப் பிரதிகளாகவும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

பாடசாலையில் தமிழ் இலக்கியபோட்டிகளில் பங்கேற்று சாதனைபடைத்தார். அன்று வெளிவந்த கதிர்என்ற சஞ்சிகையில் இன்றும் அப் பதிவைக்காணலாம். 
இலங்கை வானொலிக்காக நூற்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைத்தவர்.   கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் பல இலக்கிய விமர்சனங்களை செய்தவர்.

பலதுறைகளிலும் தடம்பதித்து சாதனை படைத்தவர்களுக்கே இவ்வாறான வித்தகர் பட்டம் வழங்கப்படவேண்டும். அது சந்திரலிங்கத்திற்குக் கிடைத்தமை மிகப்பொருத்தமே என அவர் புகழாரம் சூடினார். 

படம் தகவல்:
காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...