கொவிட்-19 பரவல் நிலை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொரளை, பூகொட, மினுவாங்கொடை, அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் நாளை (08) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.
கொவிட்-19 பரவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (08) அதிகாலை 5.00 மணியிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்
பொரளை பொலிஸ் பிரிவு
- கோத்தமிபுர வீட்டுத் திட்டம்
- 24 தோட்டம் (கோத்தமிபுர)
- 78 தோட்டம் (கோத்தமிபுர)
- வேலுவண வீதி (தெமட்டகொடை
பூகொட பொலிஸ் பிரிவு
- குமாரிமுல்ல கிராம அலுவலர் பிரிவு
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு: கல்ஒலுவ
- கல்ஒலுவ ஜும்ஆ பள்ளி வீதி
- ஹிஜ்ரா மாவத்தை
- அலுத் பார (புதிய வீதி)
- அக்கரகொட
அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு
- போலான தெற்கு
Add new comment