விருந்து சிற்றிதழுக்கு தமிழகத்தில் விருது | தினகரன்

விருந்து சிற்றிதழுக்கு தமிழகத்தில் விருது

பாண்டிருப்பிலிருந்து வெளிவரும் விருந்து சிற்றிதழ் தமிழகத்தில் சிறந்த சிற்றிதழுக்கான விருதினை பெற்றுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் 42 வருடங்களாக இலக்கியப் பணியாற்றி வரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிற்றிதழ்களுக்கான போட்டியில் கிழக்கிலிருந்து மாதம் இரு முறை வெளிவரும் விருந்து சிற்றிதழ் சிறந்த சிற்றிதழுக்கான விருதினை பெற்றுக்கொண்டுள்ளது.

கிழக்கில் பாண்டிருப்பில் இருந்து மாதம் இரு முறை வெளிவருகின்ற கலை, இலக்கிய, சஞ்சிகையான விருந்து சிற்றிதழ்.   அகரம் செ.துஜியந்தனை ஆசிரியராகவும் மூத்த கவிஞர் மு.சடாட்சரனை ஆலோசகராகவும் கொண்டு வெளிவருகின்றது..

விருந்து சிற்றிதழுக்கு அயல்நாடொன்றில் சிறந்த சிற்றிதழுக்கான விருதும் கொளரவமும் கிடைப்பது பெருமையளிக்கிறது. எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் இவ் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுவதுடன் சஞ்சிகைஆசிரியர் அகரம் .துஜியந்தன் விருது வழங்கி  கௌரவிக்கப்படவுள்ளார்.


Add new comment

Or log in with...