'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' | தினகரன்

'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்'

-  மல்லிகை ஜீவா

எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மறைவுக்கு உலக எழுத்தாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது 'எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' ஈழத்தின் ஒரு வரலாற்றை பறைசாட்டும் நூல் என பலரும் போற்றுகின்றனர்.

தண்ணீரும் கண்ணீரும் (1960), பாதுகை (1962), சாலையின் திருப்பம் (1967),  வாழ்வின் தரிசனங்கள் (2010) உ ள்ளிட்டவை டொமினிக் ஜீவா சிறுகதைகளில் மிகவும் புகழ் பெற்றவை.

அதபோல, அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம், நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகள் காலத்தால் அழியாதவை என்றும்நினைவில் நீங்காதகாவியமாக போற்றப்படுகிறது.

இதனிடையே, மொழிபெயர்ப்பு நூல் சிலவற்றையும் ஜூவா படைத்துள்ளார். மேலும்,  டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி ஜீவா),  மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001), பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி), மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004) உள்ளிட்டவை ஜீவா பற்றிய ஆய்வு நூல்களாக திகழ்ந்து வருகின்றது.(ஸ)
 


Add new comment

Or log in with...