மன்னார், மாந்தை பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கடற்படையினர் 67.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
மாந்தை கடற்கரை பகுதியில் இரு வெவ்வேறு புதர்களில் கோணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 67.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கடத்தல்காரர்கள் மறைத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, 32 பொதிகளில் பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் தெரு மதிப்பு ரூ. 23 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை (26) அதே பகுதியில் கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 31 கிலோகிராம் கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
குறித்த கஞ்சா பொதிகள், மேலதிக விசாரணைகளுக்காக வங்காலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Add new comment