அடியார்களின் கடமைகள், உரிமைகள்...

அடியார்களின் கடமைகள், உரிமைகள்...-Muslims Duties and Rights

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸஹாபிக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக முன்னே செல்கிறார்கள். அப்போது ஜனாஸாவாக இருப்பவர் ஒரு கடனாளி என்பதனை அறிந்த நபிய வர்கள், "இவருக்குத் தொழுகை நடத்த முடியாது"எனச் சொன்னார்கள். அப்போது அங்கிருந்த நபித் தோழர் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே அவரது கட னுக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்"என்றார். அதன் பின்னரே நபி (ஸல்) அவர்கள் அவருடைய ஜனாஸாவைத் தொழு வித்தார்கள்.

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து "இன்ன பெண் மிக அதிகமாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள். உபரியான நோன்புகள் நோற்கின்றாள். ஸதகா கொடுக்கின்றாள். ஆனால், தன் அண்டை வீட்டாருக்குத் தனது நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்."எனக் கூறினார். இதைக் கேட்ட அண்ணலார் (ஸல்) அவர்கள், "அப்பெண் நரகம் புகுவாள்"என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர் மீண்டும் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாக நஃபில் (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள். மிகக் குறைவாக நஃபில் (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள். பாலாடைக் கட்டியின் சில துண்டுகளை தானம் செய்கின் றாள். ஆனால், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை"என்று கூறினார். இதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள், "இவள் சுவனம் புகுவாள்"என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்)

அடியார்களோடு தொடர்புடைய கடமைகள், உரிமைகள் எவ்வளவு பாரதூரமானது என்பதற்கு இவ்விரு சம்பவங்களும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.


There is 1 Comment

Add new comment

Or log in with...