கொவிட்–19 சிகிச்சை வழங்க புதிய வழிகாட்டல் வெளியீடு

கொவிட்–19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க புதிய வழிகாட்டியை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பின்னரும் தொடர்ந்து நோய் அறிகுறிகளைக் கொண்டிருப்போருக்கும் புதிய வழிகாட்டி முறை பொருந்தும்.

நோயாளிகளிடையே இரத்தக் கட்டுகள் ஏற்படாமல் இருக்க குறைந்த அளவில் மருந்துகள் கொடுக்கவும் நிறுவனம் அறிவுறுத்தியது.

வீட்டில் இருக்கும் நோயாளிகள் தங்கள் சுவாச வாயு அளவுகளைக் கண்காணிக்க பல்ஸ் ஒக்சிமீட்ரி கருவிகளைப் பயன்படுத்த ஆலோனை கூறப்பட்டுள்ளது. எனினும் நோயாளிகளுக்கு அறிவூட்டிய பின் தேவையெனில் மருத்துவ ஆதரவுடன் இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சுவாசிப்பதற்கு ஏதுவாக தங்கள் வயிற்றுப் பகுதியில் படுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நோய்த் தொற்று தொடர்பில் மீளாய்வு செய்யும் நிபுணர்கள் குழு ஒன்றின் பரிந்துரைக்கு அமையவே இந்த புதிய வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இதன் நன்மைகள் பற்றி மருத்துவர்களிடையே கருத்து முரண்பாடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...