ட்ரம்ப் மீதான விசாரணைக்கு குடியரசு உறுப்பினர் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அந்நாட்டு செனட் சபையில் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிட்டத்தட்ட அனைத்து குடியரசு கட்சி வேட்பாளர்களும் வாக்களித்துள்ளனர்.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு 50 ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்கள் மற்றும் ஐந்து குடியரசு கட்சியினர் ஆதவை வெளியிட்டதால் இந்த விசாரணையை நிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

எனினும் இந்தத் தீர்மானம் வெற்றிபெற தேவைப்படும் மூன்றில் இரண்டு வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு 17 குடியரசுக் கட்சியினரின் ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க பாராளுமன்றக் கட்டத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டியதாகவே அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையால் செனட் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தில் தோல்வி அடைந்தால் ட்ரம்புக்கு எதிர்காலத்தில் அரச பதவிகளை வகிப்பதற்கு தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...