இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் | தினகரன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில்

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் பெ ப்ரவரி 5-ம்திகதி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது தொடரை 2-–0 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் நேற்று சென்னையை சென்றடைந்தது. சென்னை விமான நிலையம் சென்ற அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்திய காலம் முடிவடைந்த பின்னர் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.


Add new comment

Or log in with...