2021 இல் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டிய ஸ்மார்ட்போன்: Nova 7 SE

2021 இல் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டிய ஸ்மார்ட்போன்: Nova 7 SE-5G Powered Huawei Nova 7 SE is the Smartphone to Own in 2021

- 5G இனால் மேலும் வலுவூட்டப்படுகிறது

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமும், 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியுமான Huawei, முதல் நடுத்தர 5G ஸ்மார்ட்போனான Nova 7 SE இனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 5G அனுபவத்தைப் பெறக் காத்திருப்பவர்களுக்கு இதற்கு முன்னர் கண்டிராத செயற்பாட்டினை வழங்கும் பொருட்டு உயர் தர Kirin 820 5G SoC chip இனை கொண்டுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று  90.3%  Screen body ( திரை உடல்) விகிதத்துடன் கூடிய Punch Full view  திரையாகும். கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்ட Nova 7 SE, ஸ்பேஸ் சில்வர், க்ரஷ் பச்சை மற்றும் மிட்சமர் ஊதா ஆகிய மூன்று கவர்ச்சிகரமான வண்ண வகைகளில் வருகின்றது.

Huawei Nova 7 SE ஸ்மார்ட்போனானது மிகவும் வினைத்திறனான Kirin 820 5G Soc chip இனால் வலுவூட்டப்படுகின்றமையானது மொபைல் கேம்ஸ் பிரியர்களுக்கு மிக வேகமான செயற்பாட்டை வழங்குகின்றது. அல்ட்ரா கிராபிக்ஸ் உடனான Heavy gams (பளுவான கேம்ஸ்களை) விளையாடும் போது கூட எவ்வித பின்னடைவுகளும் இல்லாத செயல்திறனை வழங்குகிறது. மேலும், பாவனையாளர்கள் படங்கள், அப்ளிகேஷன்கள் மற்றும் கோப்புகளை நினைப்பதை விட வேகமாக தரவிறக்கம் செய்துகொள்ளக் கூடியமையானது Nova 7 SE  இன் மீது உங்கள் கவனத்தை செலுத்துவதற்கான இன்னொரு காரணமாகும்.

Nova 7 SE, 8GB RAM இனையும் கொண்டுள்ளமையானது, அதன் உயர் செயல்திறன் மற்றும் பல பணிகளை மேற்கொள்ளத் தேவையான செயல்திறனைக் கொண்டதாக இதனை மாற்றியுள்ளது. மேலும் இதன் உள்ளமைக்கப்பட்ட 128GB நினைவகமானது பாவனையாளர்கள் இலகுவாக திரைப்படங்கள், பாடல்கள், அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை சேமிக்க உதவுகின்றது.

Nova 7 SE ஆனது Singer Plus, Singer Mega காட்சியறைகள் மற்றும் நாடுபூராகவும் உள்ள அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ. 64,999 என்ற அறிமுக விலையில் கிடைக்கின்றது


Add new comment

Or log in with...