முள்ளியவளை பகுதியில் நூற்றுக்கும் அதிக மோட்டார் குண்டுகள் மீட்பு | தினகரன்

முள்ளியவளை பகுதியில் நூற்றுக்கும் அதிக மோட்டார் குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியில் 146 மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

முள்ளியவளை வித்தியானந்தா, தேசிய பாடசாலையில் கடந்த 25ஆம் திகதி மைதான துப்புரவு பணியின் போது பாவனைக்குதவாத மோட்டார் குண்டுகள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

முள்ளியவளை பகுதியில் நூற்றுக்கும் அதிக மோட்டார் குண்டுகள் மீட்பு-Hundreds of Unusable Mortar Shells Recovered From Vidyananda College Playground in Mulliyawalai-Mullaitivu

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் பல மோட்டார் குண்டுகள் மேலும் நிலத்தில் புதையுண்டு காணப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக இன்றையதினம் (28) அவற்றை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

முள்ளியவளை பகுதியில் நூற்றுக்கும் அதிக மோட்டார் குண்டுகள் மீட்பு-Hundreds of Unusable Mortar Shells Recovered From Vidyananda College Playground in Mulliyawalai-Mullaitivu

முள்ளியவளை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து, இராணுவ பொறியியல் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையில், பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட 146 மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • 152 மி.மீ. மோட்டார்குண்டுகள் 110
  • 122 மி.மீ. மோட்டார்குண்டுகள் 36
  • 152 மி.மீ. மோட்டார்குண்டு காட்ரீஜ் 49
  • 122 மி.மீ. மோட்டார்குண்டு காட்ரீஜ் 29
  • உருகிகள் (பியூஸ்) 10

ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

முள்ளியவளை பகுதியில் நூற்றுக்கும் அதிக மோட்டார் குண்டுகள் மீட்பு-Hundreds of Unusable Mortar Shells Recovered From Vidyananda College Playground in Mulliyawalai-Mullaitivu

முள்ளியவளை பகுதியில் நூற்றுக்கும் அதிக மோட்டார் குண்டுகள் மீட்பு-Hundreds of Unusable Mortar Shells Recovered From Vidyananda College Playground in Mulliyawalai-Mullaitivu

Add new comment

Or log in with...