மட்டக்களப்பில் 15,000 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இம்முறை 21 ஆயிரத்தி 72 ஏக்கர் பெரும்போக நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் முதல் மட்டக்களப்பில் பெய்த தொடர் அடைமழை காரணமாக சிறிய குளங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்ததனால் அப்பகுதியில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டடுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அறுவடைக்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் இப்பாதிப்பு இடம் பெற்றுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நஷ்ட ஈட்டை பெற்றுத் தருமாறு கேரிக்கை விடுக்கின்றனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...