இரு நாட்டு மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல

- யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அரவிந்தன்

இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் செய்வதை இலங்கை இந்திய நாட்டு அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும். இதனை விடுத்து தமிழக மீனவர்களையும் இலங்கை வடபகுதி மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ச.அரவிந்தன் தெரிவித்தார். 

யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (26) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்  

இந்திய தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் செய்வதை அனுமதிக்கமுடியாது இதனை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அவர்கள் அத்துமீறி வருகிறார்கள் என்பதற்காக அவர்கள் உயிர் பறிப்பது ஏற்புடையது அல்ல, இதனை இருநாட்டு மீனவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.  

தற்போதைய சூழலில் ஜெனிவா விவகாரம் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள சூழலில் அதனை திசை திருப்புவதற்காக வடபகுதி மக்கள் இதற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை காண்பிப்பதற்காக அரசாங்கமும் அரசாங்க பிரதிநிதிகளும் வடபகுதியில் சில போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த விடயங்களை தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் வடபகுதி மீனவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அது மட்டுமன்றி இந்திய அரசாங்கமும் இதனை புரிந்து கொண்டு இலங்கை தமிழ் மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.  

கோப்பாய் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...