முன்மாதிரியான வகையில் தடுப்பூசி செயற்றிட்டம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை வழங்கும் செயற்திட்டம் மிகுந்த பாதுகாப்புடனும் முறையாக திட்டமிடப்பட்ட வகையிலும் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நாட்டின் சனத்தொகையில் 80 வீத மானவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான பரிந்துரையை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

முழு உலகுக்கும் முன்மாதிரியான வகையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற விஷேட ஊடக சந்திப்பின்போது மேற்படி தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் அதனை மக்களுக்கு பயன்படுத்தும் முறையான திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...