குருநாகல் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று | தினகரன்

குருநாகல் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று

குருநாகல் நகரின் வாணிபத் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் இன்று ( 28) நடைபெறும்.

கும்பாபிஷேகக் கிரியைகள் முற்பகல் 9.40 இற்குக் கூடியுள்ள சுபவேளையில் நடைபெறும். நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பிரதம குரு ‘கிரியா கலாபணி, கிரியா கிரமஜோதி, வித்தியா சாகரம்” பிரம்மஸ்ரீ சு.திவாகர குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகக் கிரியைகள் நடைபெறும்.

இன்று அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது. சகல பூஜை புனஸ்காரங்களும் கொவிட்-19 தொடர்பான சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய நடைபெறும்.


Add new comment

Or log in with...