தேசிய அமைப்பாளர் பதவியை நிராகரித்தமைக்கு காரணம் இதுவே | தினகரன்

தேசிய அமைப்பாளர் பதவியை நிராகரித்தமைக்கு காரணம் இதுவே

தேசிய அமைப்பாளர் பதவியை நிராகரித்தமைக்கு காரணம் இதுவே-Why I Opposed UNP National Organizer Post-Navin Dissanayake

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உட்பட கட்சியில் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே தேசிய அமைப்பாளர் பதவியை நிராகரித்ததாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராகவே உள்ளேன். கட்சியில் இருந்து விலக மாட்டேன்.

ஐ.தே.கவின் தலைமைத்துவம் உட்பட பல முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில் நான் தொடர்ந்து இருப்பதுடன், எனது அரசியல் பயணம் எவ்வாறு அமையுமென எதிர்காலத்தில் கூறுவேன்.

ஆயினும் கட்சியை விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன். பதவிகளுக்கு ஆசைப்பட்டு நான் அரசியல் செய்யவில்லை என சுட்டிக்காட்டினார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...