ஈரான் எண்ணெய் கப்பலை இந்தோனேசியா பறிமுதல் | தினகரன்

ஈரான் எண்ணெய் கப்பலை இந்தோனேசியா பறிமுதல்

ஈரானிய கொடியுடனான கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருப்பது தொடர்பில் இந்தோனேசியாவிடம் ஈரான் விளக்கம் கோரியுள்ளது.

தனது கடல் பகுதியில் வைத்து ஈரான் மற்றும் பனாமா கொடியுடன் வந்த கப்பல்களை பறிமுதல் செய்ததாக இந்தோனேசியாக அறிவித்து ஒரு நாளைக்குப் பின்னரே ஈரான் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய கடல் பகுதிக்குள் சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்ட சந்தேகத்திலேயே இந்த கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல்களில் இருந்த ஈரான் மற்றும் சீன நாட்டு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரு கப்பல்களும் இரண்டு மில்லியன் பீப்பாய் எண்ணெயை கொண்டு செல்லும் திறன் கொண்டவையாகும்.

ஈரானின் எண்ணெய் விற்பனையை முற்றாக தடுக்கும் வகையில் ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா 2018 ஆம் ஆண்டு மீண்டும் அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...