அமெரிக்காவில் வீடொன்றில் ஐந்து பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஒரு கூட்டுப் படுகொலை என்று அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை காப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதில் தாக்குதலுக்கு இலக்கான ஆறாவது நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

எந்த நோக்கத்திற்காக இந்த தாக்குதல் இடம்பெற்றது என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இது தொடர்பில் எவரும் நேற்று பின்னேரம் வரை கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

இன்டியானாபொலிஸில் கடந்த 2020 இல் 245 படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதோடு இது 2019 உடன் ஒப்பிடுகையில் 40 வீத அதிகரிப்பாகும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Add new comment

Or log in with...