பாராளுமன்ற நிர்வாகப்பிரிவு உதவி பணிப்பாளராக நியமனம் | தினகரன்

பாராளுமன்ற நிர்வாகப்பிரிவு உதவி பணிப்பாளராக நியமனம்

வெலிகம - கல்பொக்கையைச் சேர்ந்த எம்.யூ.எம். வாஸிக் இலங்கைப் பாராளுமன்ற நிர்வாகப் பிரிவு உதவிப் பணிப்பாளராக அண்மையில் பதவி உயர் பெற்றுள்ளார்.

1993ம் ஆண்டு பாராளுமன்ற அலுவலராக முதல் நியமனம் பெற்று, அதன்பின் சிரேஷ்ட அலுவலராக, பிரதி பிரதான அலுவலராக மற்றும் பிரதான அலுவலராக கடமை புரிந்து அண்மையில் உதவிப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

வெலிகம அறபா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியாவார்.

சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இவர் மாத்தறை மாவட்ட சமாதான நீதவானுமாவார். இவர் வெலிகம கல்பொக்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் காலஞ்சென்ற ஏ.எம்.எம். உவைஸ் தம்பதிகளின் புதல்வருமாவார்.

(வெலிகம தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...