முகக்கவசம் தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் 35 பேருக்கு கொரோனா | தினகரன்

முகக்கவசம் தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் 35 பேருக்கு கொரோனா

பூகொட பெல்பிட்ட பிரதேசத்தில் உள்ள முகக்கவசம் தயார் செய்யும் நிறுவனத்தின் பணி புரியும் 35 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் 220 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது 35 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என பூகொட சுகாதார வைத்திய அதிகாரி திருமதி. குமாரி விஜயசூரிய தெரிவித்தார். இந்நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பூகொட தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...