2ஆவது முறை தடுப்பூசிக்கான காலத்தை குறைக்க கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இரண்டு முறை தடுப்பூசி போடுவதற்கு இடையே, கால வரம்பைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் தடுப்பூசி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவும் வேளையில் அவர்கள் இவ்வாறு கோரியுள்ளனர்.

பிரிட்டனில் தகுதி பெற்றவர்களுக்கு முதல் தடுப்பூசி போட்ட 12 வாரங்களுக்குப் பின்னர் இரண்டாம் ஊசி போடப்படும். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது ஊசி போட்டால், அதன் செயல்திறன் குறைந்து போகலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

அதிகபட்சம் ஆறு வாரங்களுக்குள் இரண்டாம் தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வழிகாட்டியிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான்கு வாரங்களுக்கு மிகாமல் இரண்டாம் தடுப்பூசியைப் போடுவது நல்லது என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.


Add new comment

Or log in with...