ஆசியாவின் பெரும் போதை கடத்தல் தலைவன் கைது | தினகரன்

ஆசியாவின் பெரும் போதை கடத்தல் தலைவன் கைது

அவுஸ்திரேலியா விடுத்த பிடியாணையை அடுத்து உலகின் மிகப்பெரிய போதைக்கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவர் நெதர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசியா முழுவதும் 70 பில்லியன் டொலர் பொறுமதியான போதைப்பொருள் சந்தையை நடத்தி வந்த நிறுவனம் ஒன்றின் தலைவரான ட்சே சி லொப் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சீனாவில் பிறந்து தற்போது கனடா பிரஜையாக உள்ளார்.

தலைமறைவான நிலையில் உலகில் அதிகம் தேடப்படுபவர்களில் ஒருவராக உள்ள ட்சே, ஆம்ஸ்டர்டாம் சிச்சிபோல் விமானநிலையத்தில் வைத்தே பொலிஸாரிடம் சிக்கினார்.

அவர் மீது வழக்குத் தொடுக்க திட்டமிட்டிருக்கும் அவுஸ்திரேலியா அவரை நாடுகடத்தும் கோரிக்கையை விடுக்கவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குள் வரும் 70 வீதமான போதைப்பொருட்களுக்கு ட்சேவின் சாம் கோர் சின்டிகேட் என்ற நிறுவனமே பொறுப்பாக உள்ளது என்று அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார் நம்புகின்றனர்.

ட்சேவை ஒரு தசாப்தத்திற்கு மேலாக அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...