புதுக்குடியிருப்பில் 15 கிலோ மீற்றருக்கு யானை வேலி அமைக்குமாறு கோரிக்கை | தினகரன்

புதுக்குடியிருப்பில் 15 கிலோ மீற்றருக்கு யானை வேலி அமைக்குமாறு கோரிக்கை

புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியினை சேர்ந்த கைவேலி, வேணாவில், மருதமடு பகுதிகளில் உள்ள வயல் செய்கையாளர்கள் மற்றும் மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் காட்டுயானையினால் நாள்தோறும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருவதாகவும் இந்த பகுதிகளில் உள்ள வயல் நிலங்களையும் மேட்டு நில பயிர்களையும் பாதுகாக்கும் நோக்கில் 15கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள மஞ்சல் பாலத்தில் இருந்து கைவேலி, வேணாவில், தொடக்கம் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் வீதியில் எழுவாலி பகுதி வரை யானை வேலி அமைத்து கொடுத்தால் தங்கள் வாழ்வாதாரம் காட்டு யானையில் இருந்து பாதுகாக்கப்படும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர் 


Add new comment

Or log in with...