G.L க்கு கொரோனா இல்லையென உறுதி

- PCR பரிசோதனையில் "நெக்கடிவ்"

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தகொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பைக் கல்வி அமைச்சர் மேற் கொண்டிருந்தமை தெரியவந்த நிலையில் அவர் சுய தனிமைப்படுத்தப்பட்டார்.  அத்தோடு பி.சி.ஆர்.பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.    


Add new comment

Or log in with...