சந்தையில் கவனத்தை ஈர்த்து வரும் டீல் நீலக்கற்கள் | தினகரன்

சந்தையில் கவனத்தை ஈர்த்து வரும் டீல் நீலக்கற்கள்

சந்தையில் கவனத்தை ஈர்த்து வரும் டீல் நீலக்கற்கள்-Aaara and Aarti Teal Collection

- பிரகாசமான தயாரிப்புகளின் மூலம் உயர்தர அனுபவத்தை வழங்கிவரும் Aaraa & Aati

நீலக்கற்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மிகவும் விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களாக போற்றப்படுகின்றன. வரலாறு முழுவதும், அவை பல்வேறு ஆன்மீக மற்றும் தெய்வீக சக்திகளைக் கொண்டதாகவும், உண்மை, களங்கமின்மை, அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தின் அடையாளங்களாக கருதப்படுகின்றன. அவை உலகில் நீடித்த, இயற்கையாக நிகழும் கூறுகள் என்பதால், அவை நிச்சயதார்த்த மோதிரங்கள் மற்றும் அன்றாட நகைகளுக்கு சிறந்த தெரிவாக அமைகின்றன.

உண்மையில், பல்வேறு காரணங்களுக்காக அதிகமான பெண்கள் பாரம்பரிய வைரங்களை விட வண்ண நீலக்கற்களை தெரிவு செய்கின்றனர். நீலக்கற்கள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. பேர்பெக்ட் பீச் முதல் டெரிபிக் டீல்ஸ் மற்றும் பியூட்டிபுல் ப்ளூஸ் வரையான வண்ணங்களில் கிடைப்பதுடன், அனைவரையும் ஈர்க்கின்றன. இதன் மேலும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவை ஒன்றைப்போல் இன்னொன்று இருப்பதில்லை என்பதுடன், அழகு மற்றும் தரத்தில் சமரசம் செய்யாமல் மிகவும் நியாயமான விலையில் கிடைக்கின்றன.

Aaraa & Aati, இலங்கையின் உள்நாட்டு ஆடம்பர ஆபரண வர்த்தகநாமமென்பதுடன் - மேற்குலகிற்கு நேர்த்தியான உலகத் தரம் வாய்ந்த இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதில் புகழ்பெற்றது. மேலும் இரத்தினக்கல் வர்த்தகத்தில் புதிதாக நுழைந்ததுடன்,  ஏனையோர் அதிக கவனம் செலுத்தாத டீல் நீலக்கல் (Teal Sapphires) மீது அதிக கவனம் செலுத்தியுள்ளது. இயற்கையின் இந்த அதிசயத்தால் ஈர்க்கப்பட்டு, இந் நிறுவனம் முதற்தரமான டீல் நீலக்கற்களை பெற்றுக்கொள்வதற்கும் அவற்றின் உற்பத்தியில் நிபுணத்துவம் பெறுவதற்கும் தனது கவனத்தை செலுத்த முடிவு செய்ததுடன், இதனை கடந்த பத்தாண்டுகளாக முன்னெடுத்து வருகின்றது.

டீல் நீலக்கற்கள் நீலத்தின் அமைதியான ஆழத்தை பச்சை நிறத்தின் புதுப்பிக்கும் ஆற்றலுடன் இணைப்பதுடன், இவை சீர்மை மற்றும் தெளிவின் புத்துணர்ச்சி மிக்க வெளிப்பாடென்பதுடன் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னமாகவும் திகழ்கின்றன. அவை வைரங்கள் போன்ற வழக்கமான இரத்தினங்களுக்கு அற்புதமான மாற்றாக இருக்கின்றன. மேலும் அவை ஈர்ப்பைக் கொண்டுள்ளமையானது அவை நேர்த்தியான நகையாக கருதப்படுவதற்கு காரணமாக உள்ளன. தங்கள் வாழ்க்கையை மாற்றும் தருணங்களை பொக்கிஷமாக பேண விரும்புவோருக்கு மிகவும் நேர்த்தியான நிச்சயதார்த்த மற்றும் திருமண மோதிரங்களை வழங்குவதற்காக Aaraa & Aati இன் டீல் நீலக்கற்கள்  நுண்ணியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Aaraa & Aati இன் இணை ஸ்தாபகர் பாஹ்மி ரஹ்மான் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "ஒவ்வொரு டீல் நீலக்கல்லுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது, அது அதன் வண்ண மாறுபாடுகளில் பிரதிபலிக்கிறது. அவற்றின் தனித்துவமான சாயல்கள் மற்றும் வண்ணநயம் அவற்றை மிகவும் சிறப்பானதாக ஆக்குகின்றன. கடந்த காலங்களில் வண்ண இரத்தினக் கற்கள் அணியப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன - நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், புராணங்கள், அதனுடன் தொடர்புடைய குணப்படுத்தும் நன்மைகள், தாயத்துக்கள், பிறப்புக் கற்கள் மற்றும் இராசிக் கற்கள் போன்றவை - தெளிவான மற்றும் அழகான வண்ணங்களே டீல் நீலக்கற்களை நம்பமுடியாத அளவிற்கு கவர்ச்சிமிக்கதாக ஆக்குகின்றன,” என்றார்.

டீல் நீலக்கல்லுக்கான நிலையான வண்ண தரப்படுத்தல் இல்லாமையானது Aaraa & Aati இற்கு முதற்தரமான வண்ண தரங்களுக்கு அதன் சொந்த அளவுகோலை உருவாக்க தூண்டியது. வண்ணச்சாயலைப் பொறுத்தவரை, மிகவும் விலைமதிப்பற்ற டீல் நீலக்கற்கள் நீல மற்றும் பச்சை வண்ணங்களின் சமமான அல்லது அருகிலுள்ள சமமான கலவையைக் கொண்டவை - இதன் மூலம் உன்னத, பாசி, அக்குவா போன்ற நிறத்தை உருவாக்குகின்றன. வண்ணச்சாயலைப் பொறுத்தவரை, மிகவும் பெறுமதி வாய்ந்தவை மிகவும் இருண்டவையாகவோ அல்லது வெளிச்சமாகவோ இருப்பதில்லை. செறிவூட்டலைப் பொறுத்தவரை, பச்சை நிறத்தில் 50% செறிவூட்டலும், நீலத்தின் 50% செறிவூட்டலும் சரியான கலவையாகும். பொதுவாக, மிகவும் தீவிரமான மற்றும் சீரான நிறத்தைக் கொண்டவை அதிக பெறுமதி வாய்ந்த கற்களாகும்!

Aaraa & Aati வாடிக்கையாளர்களுக்கு தங்கள் நகைகளை வடிவமைக்க முற்றிலும் கவர்ச்சிகரமான அனுபவத்தை வழங்குகிறது. அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது தேவைக்கேற்ற வகையில் ஆடம்பர அனுபவத்தை வழங்குவதன் மூலம், நிறுவனத்தின் இறுதி குறிக்கோள் ஆடம்பர வாடிக்கையாளர் அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதாகும்.

மேலதிக விபரங்களுக்கு, விஜயம் செய்யுங்கள் www.aaraa-aati.com அல்லது அழைக்கவும் 0770218384


Add new comment

Or log in with...