AI மூன்று கெமரா; 6.52" பெரிய திரையுடன் OPPO A15 அறிமுகம் | தினகரன்

AI மூன்று கெமரா; 6.52" பெரிய திரையுடன் OPPO A15 அறிமுகம்

AI மூன்று கெமரா; 6.52" பெரிய திரையுடன் OPPO A15 அறிமுகம்-6-52 Inch Display & 3 AI Camera-OPPO Launches A15

OPPO இலங்கையில் புதிய OPPO A15 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. AI  Triple (மூன்று) கெமரா மற்றும் 6.52 அங்குல பெரிய திரை ஆகியவற்றைக் கொண்ட OPPO A15 ஆனது, ஒரு பெரிய திரையுடன், மிகத் தெளிவான மற்றும் மிருதுவான புகைப்படங்களைப் எடுக்க உதவுகிறது. நீடித்து நிலைக்கும் மின்கலம், பாரிய சேமிப்புக்கான இடத்தையும் வழங்குகிறது. OPPO A15 ஆனது எவ்வித குறுக்கீடு இல்லாத இணைப்பை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, Xinda Lanka (OPPO Sri Lanka) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி, "OPPO A15 இனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது பயனர்கள் தங்களது கையடக்கத்தொலைபேசி வாழ்வை ஈடு செய்யத் தேவையான அத்தியாவசிய அம்சங்களை வழங்குகிறது" என்றார். "OPPO A15 மூலம், நீங்கள் AI Triple கெமரா மூலம் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம் என்பதோடு, 6.52" பெரிய திரையில் HD+ திரை அனுபவத்தை வழங்கும் அதே நேரத்தில், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ச்சியாக இணைந்திருக்க வாய்ப்பளிக்கிறது. "

AI Triple Camera மற்றும் AI Beautification
AI Triple கெமரா அமைப்பில், OPPO A15 ஆனது 13MP பிரதான கெமரா, 4cm எனும் மிக அருகிலுள்ள காட்சிகளைப் பிடிக்க உதவும் 2MP மெக்ரோ லென்ஸ் மற்றும் 2MP ஆழ கெமரா  portrait புகைப்படங்களை எடுப்பதற்கு அதிக ஆழத்தை இணைக்கவும் உதவுவதோடு, பின்னணியில் உள்ளவற்றிற்கு இயற்கையான  bokeh விளைவை சேர்க்கவும் உதவுகின்றது.

HDR ஆனது, குறைந்த ஒளி சூழலில் அல்லது பின்னாலிருந்து வரும் ஒளியை எதிர்த்து எடுக்கும் portraits புகைப்படங்களை எடுக்க அனுமதிப்பதோடு, Portrait Bokeh ஆனது புகைப்படங்களை எடுக்கும்போது இயற்கையான bokeh பின்னணியை வழங்குகிறது. அத்துடன் தனித்துவமான ஆறு வகையான portrait filters மூலம் நேர்தியான படங்களை பெறவும் உதவுகின்றது. ஆச்சரியமூட்டும் வண்ணம் (Dazzle Color மற்றும் AI காட்சி அடையாளப்படுத்தல் (AI Scene Recognition) ஆகியவற்றை இணைத்து, OPPO A15 ஆனது, AI காட்சி விரிவாக்கத்தை வழங்குவதோடு, 21 வெவ்வேறு பாணியிலான இயற்கை மற்றும் அழகிய காட்சிகளை மேலும் மெருகூட்டுகிறது. அத்துடன், மீள்உருவாக்கத்தை கொண்ட முன் மற்றும் பின்புற filterகள் காணப்படுகின்றன. அவை 15 வகையான புகைப்பட filter கள் மற்றும் 10 அற்புதமான வீடியோ filter களை வழங்குகின்றன.

OPPO A15 இன் 5MP முன்பக்க கெமரா, இயற்கை அழகை மேம்படுத்துவதற்கான தெரிவுகளையும் வழங்குகிறது. AI Beautification (அழகுபடுத்தல்) மூலம் பலவிதமான மனித தோல் அமைப்புகளையும், முக அம்சங்களையும் மிருதுவாக்க முடிவதோடு, இச்செயற்பாடுகள் அனைத்தும் உருவத்தின் பாலினம், வயது, இனத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

6.52” பெரிய திரை, நேர்த்தியான வடிவமைப்புடன் ஒன்றிணைகிறது
OPPO A15 ஆனது பெரிய 6.52 அங்குல water drop திரையுடன் வருகிறது. இது 89% திரைக்கு - உடல் விகிதத்தை கொண்டுள்ளதுடன் பயனர்கள் விளையாட்டுகள் அல்லது வீடியோக்களில் தங்களை முழுமையாக மூழ்கியிருக்க உதவுகின்றது. 1600 x 720 தௌிவுத்திறன் கொண்ட OPPO A15, HD+ திரையுடன் இணைந்து, திரையில் உள்ள ஒவ்வொரு விபரத்தையும் தெளிவுடன் காண உதவுகின்றது. OPPO A15 ஆனது, கண்களுக்கு இதமளிக்கும் filter கள் உள்ளிட்ட உங்கள் கண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களுடன் வருவதுடன், இது தீங்கு விளைவிக்கும் நீல ஒளியை வடிகட்டவும், கண்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தணிக்கவும் உதவுகின்றது. சூரிய ஒளிக்கு உணர்வைக் கொண்டுள்ள திரையானது, பிரகாசமான வேளையில் திரையை பிரகாசமாக்குகிறது. எனவே தொலைபேசியை சூரிய ஒளியில் கூட தெளிவாகப் பார்க்க முடியும் என்பதோடு, AI Brightness ஆனது, பயனரின் திரை ஒளிர்வு விருப்பங்களை கற்றுக்கொள்வதன் மூலம் அதற்கேற்றாற்போல் திரையின் பிரகாசத்தை தானகவே சரிசெய்கிறது.

7.9 மிமீ தடிப்பத்தை மாத்திரமே கொண்டுள்ள OPPO A15, 3D வளைந்த உடலைக் கொண்டுள்ளது. இது உள்ளங்கை பிடியை எளிதாக்கும் அதேவேளையில், அதன் மேற்பரப்பிலுள்ள 3D பூச்சு அதன் நேர்த்தியான தோற்றத்தை மெட் மற்றும் பளபளப்பான அமைப்பாக மேம்படுத்தி காண்பிக்கிறது. OPPO A15 ஆனது Dynamic Black, and Mystery Blue (கறுப்பு, நீலம்) உள்ளிட்ட நான்கு அழகிய மற்றும் கண்கவர் வண்ணங்களில் வருகிறது.

நம்பிக்கை தரும் செயல்திறனுடனான 4,230 mAh பெரிய மின்கலம்
OPPO A15 ஆனது, மிக வேகமான செயலாக்கத்திற்கான 3GB RAM மற்றும் 32GB உள்ளக சேமிப்பகத்தையம் கொண்டுள்ளது. பாடல்கள், வீடியோக்கள், கேம்களுக்கு அதிக இடத்தை வழங்கும் வகையில் OPPO A15 இன் சேமிப்பிடத்தை 256GB வரை எளிதாக நீடிக்க முடியும். MediaTekHelio P35 octa-core processor மூலம், OPPO A15 மிருதுவான, திறனான, நம்பகமான செயற்றிறனை மேற்கொள்வதோடு, இதன் காரணமாக, இலகுவில் மின்கலம் செயலிழப்பு அடையாத வகையில் செயற்படுகிறது.

OPPO A15 ஆனது, Memory Defragmentation 2.0 (சேமிப்பகத்தை ஒழுங்கமைக்கும் திறன்) இனையும் கொண்டுள்ளது. இது சேமிப்பு பகுதி, அங்குமிங்குமாக சிதறடிக்கப்படுவதை குறைப்பதோடு, தொலைபேசியின் ஒட்டுமொத்த செயற்றிறனை 5% ஆல் அதிகரிக்கும் வகையிலான உள்ளக தொகுதியினால் தன்னியக்க முறையில் செயற்படும் அமைப்பாக காணப்படுகின்றது. HyperBoost 2.1 ஆனது, FrameBoost, TouchBoost ஆகியவற்றை ஒருங்கிணைத்து மிருதுவானதும் மிக பதிலளிக்கக்கூடிய கேமிங் அனுபவத்தை பெற உதவுகிறது. HyperBoost 2.1 ஆனது, உறுதியான மற்றும் விளையாட்டினுள்ளேயான காட்சியமைப்புகளை எவ்வித பின்னடைவுகளும் இன்றி அமைவதற்கான  frame rate (பிரேம் வீதத்தை) வழங்குவதோடு, விளையாட்டு சூழ்நிலையின் போதான தொடுகையின்போது, பதிலளிப்பை மேலும் மேம்படுத்துகிறது.

OPPO A15 ஆனது, ஒரு பெரிய 4,230mAh மின்கலம் மூலம் இயக்கப்படுவதோடு, மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமற்ற வகையில், நாள் முழுவதும் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது. Super Power Saving Mode பயன்முறையைப் பயன்படுத்தி, மின்கலத்தை அதன் கடைசி மூச்சுவரை, சக்தியை கணிசமாக சேமிக்கிறது. அத்துடன், OPPO A15 ஐ கைரேகை அல்லது முகம் மூலம் எளிதாக திறக்க முடிகின்றது. காரணம், இது பின்புற கைரேகை உணரி மற்றும் AI Face Unlock தொழில்நுட்பத்துடன் வருகிறது.

சமீபத்திய ColorOS 7.2 இனை அனுபவியுங்கள்
OPPO A15 சமீபத்திய ColorOS 7.2 உடன் வசதியான பல அம்சங்களுடன் வருகிறது. Dark Mode பயன்முறையானது மிகவும் உள்ளார்ந்த இடைமுகத்திற்கான மேம்படுத்தப்பட்ட வண்ண மாறுபாட்டைக் கொண்டுள்ளதோடு, 3 விரல் அசைவின் மூலம் திரையின் புகைப்படத்தை (3-finger Scrolling Screenshot) எடுக்க முடியும் என்பதோடு, கிடையான நிலையிலும், நிலைக்குத்தான நிலையிலும் மற்றும் PDF ஆவணங்கள் போன்ற நிலையிலும், மூன்று விரல்களால் திரையில் இழுப்பதன் மூலம் திரையிலுள்ளவற்றை புகைப்படமாக பிடிக்க உதவுகிறது. ஐகன் இழுத்தல் (Icon Pull-Down) சைகை மூலம் எல்லா செயலிகளையும் திரையின் பெருவிரலுக்குள் சுருக்குகிறது. Smart Sidebar பக்கவாட்டில் மிதக்கும் சாளரத்தை உருவாக்குவதோடு, இது விரிந்து திறப்பதன் மூலம் அத்தியாவசிய தகவல்களை அடைவதற்கான விரைவான அணுகலை வழங்குகிறது. Music Party ஆனது, வேடிக்கையான வகையில் நீங்களும் உங்களது நண்பர்களும் கையடக்கத் தொலைபேசிகளை ஒரே வலையமைப்பில் ஒரே நேரத்தில் இணைப்பதன் மூலம் பாடலை ஒன்றாக இசைக்கலாம்.

சந்தையில் கிடைக்கும் தன்மை
OPPO A15 இலங்கையில் ஜனவரி 17 முதல் கிடைக்கும் என்பதோடு, Dynamic Black, Mystery Blue (கறுப்பு, நீலம்) ஆகிய இரண்டு வண்ணங்களில் வருவதோடு, இவ்வண்ணங்கள் அனைத்தும் 3GB RAM மற்றும் 32GB சேமிப்பகத்துடன் வருகிறது. OPPO A15 ஆனது, ரூ. 29,900. எனும் சில்லறை விலையில் கிடைக்கிறது.


Add new comment

Or log in with...